ஜாக்வார் காரும்
ஃபாரின் சென்ட்டும்
டிசைனர் சூட்டும்
ஒமேகா வாட்சுமாக
வெய்யில் பொறுக்காத
டெல்லியிலிருந்து
வந்த கம்பெனி
முதலாளி
ஒர்க்க்ஷாப் ஃப்ளோரில்
ஆயில் கறை துடைத்தபடி
நீல சீருடையில்
ஒரு எதிர்பார்ப்போடு
சேர்ந்த கூட்டத்தில்
பேசினார்
இந்த வருஷமமும்
போனசில்லை என்பதைக்
கூட பொறுத்துக்கொண்ட
வெல்டர் சபாபதிக்கு..
தாங்கவே இல்லை
அவர்
“நம்மல்லாம் ஒரே
குடும்பம்” என்று
சொன்னதை !
Be First to Comment