கீ பேடெங்கும்
பூசு மஞ்சள் கறை..
ரப்பர் பேன்ட் சுற்றி
அம்மாவின் ஃபோன்
பண்பலை பாடும்,
பீரோ சந்தில் பந்தெடுக்க
லைட் அடிக்கும்
அப்பாவின் ஃபோன்
பியானோ வாசிப்பது போல்
தட்டச்சு தாங்கும்
தம்பியின் ஃபோன்
இவை யாவையும் விட
விசேஷமானது
மூன்று வயது மகள்
“ஒம்பெல்லாம் ஜுரம்..
ஸ்கூலுக்கு லீவு
விட்ருங்க மிஸ்” எனப்
பேசிடும் சிறு
உள்ளங்கை ஃபோன் !
Be First to Comment