வானம் பார்க்க மாட்டார்கள்
கடலும் பார்க்க மாட்டார்கள்
பாட்டு கேட்க மாட்டார்கள்
பூவும் பார்க்க மாட்டார்கள்
சிரிக்க மறந்திருப்பார்கள்
சோற்றுப் பருக்கையை
சேர்க்கும் சிந்தனையோடு
நகரமெங்கும் தெறித்து
சிதறி ஓடுவார்கள்
பெரும் பரபரப்போடு
பிள்ளையார் எறும்புகள்
போலவே !
Be First to Comment