சற்றே தூரத்தில்
யார் யாரோ கையசைக்க..
சிறு ஊஞ்சலும், சீஸாவும்,
வித விதமான
கரடி பொம்மையும்
ஒரு புறம் ஈர்க்க..
முன்னே கதறி அழும்
குழந்தை,
மேலும் கலவரம் சேர்க்க
மழலை மாறப்போகும்
விபரீதம் புரியாமல்..
கேட்டின் ஓரத்தில்
அம்மா, அப்பா
எப்போதும் இருப்பார்கள் என்று
நம்பியபடி
புது மிஸ்ஸின்
கையைப் பற்றி,
திரும்பி திரும்பி
பார்த்தபடியே
உள்ளே போனது
குழந்தை !
கேட்டின் அருகே
சொல்லத்தெரியாமல்
கலங்கியபடி
வளர்ந்த இரு
குழந்தைகள் !
Be First to Comment