முதல் துளி பட்டு
அனல் எழுப்பி
புள்ளியாய் விழுந்து
வளையம் செய்து
அம்பாய்ப் பட்டு
பரப்பில் தெறித்து
சூழல் இருட்டாக்கி
ஈரப்பதம் அதிகரித்து
காற்றில் சுழன்று
அடர்மழை அடித்த
பின்
சிறகு நனைந்த
பறவையென நானும்
கலையும் மேகமென
நீயும் !
துளி அனல்
Published inUncategorized
Be First to Comment