பொதுவான நிறம்
தனக்கில்லை
சுடும் வெயில்
கண் கூசியதில்லை
பெருமழையில்
நனைந்ததில்லை
பலத்த காற்றில்
திருப்பிக் கொண்டதில்லை
குழந்தைகள் தொட்டு
விளையாடியதில்லை
என பல கவலைகள்
பெரிய லைட்டோடு
ஒட்டி மணமேடையில்
சுவாரசியமில்லாமல்
நின்றபடி இருக்கும்
வெள்ளைக் குடைகளுக்கு !
Be First to Comment