ஒரு வத்திக்குச்சி
எரிந்து முடியும்
நேரம் மட்டுமே
நீ
இருந்திருந்தாலும்
ஒரு பெரிய காடு
எரிந்து முடியும்
நேரம் வரை
உன் வாசம்
மிக லேசாக
உதடு அழுந்தாமல்
நீ ஒற்றி வைத்துப்
போன ஒரு
சிறு முத்தம்
தெரு மீது
தேர்சக்கரத்தின்
எடை போல
உணர்ந்த அழுத்தம்
Be First to Comment