நெல்மணிகள் கூடி
செழித்து தலை சிலுப்பி
வரப்பின் புல் மேல் சாய்ந்து
ஊர் வேடிக்கை பார்க்க
பெருமையாக
காற்றில் அசைந்தாடியது
முற்றிக் காய்ந்த
நெல் கதிர்கள்
வளர்த்து உதவிய
பம்புசெட்டுக்
கிணற்று நீரோ
பாறைகளுக்குக் கீழே
ஆழத்தில்
சலனமில்லாமல்
வானத்தின் நீலம்
பார்த்தபடி
Be First to Comment