வெள்ளைத்துண்டு, படிகாரம்,
மெதுவாய் சுற்றும் ஃபேன்,
ராமர் கலர் சீட்டுடன்
சுழலும் நாற்காலி,
பிரம்புக்கூடையில் முடி,
பட்டை தீட்டும் பெல்ட்,
“ஓ” போல தண்ணீர் ஸ்பிரே,
காலுக்கடியில் செங்கல்
வைத்த மர பென்ச்,
கலைந்த தினசரிகள்,
ஒயின்ஷாப் கவர்ச்சிப்படம்
இவை ஏதுமில்லாத..
நிறைய லைட்டுகள்
வெள்ளை வெளிச்சம்
கொண்ட ஏசி சலூன் கடையில்
சின்ன மகனின் தலையை
சாய்த்து பிடித்தபடி நான்
எனக்குப் பின்னே
கண்ணாடிக்குள் கண்ணாடிகள்
அதில்
என்னைப் பிடித்தபடி அப்பா
அவரைப் படித்தபடி தாத்தா என
தலைமுறை பிம்பங்கள்.
What a coincidence, களிச் சிற்றலை (nov 14) என்ற என் கவிதையிலும் இப்படித்தான் எழுதியிருக்கிறேன். அதில்கூட தலை முடி ஒரு பின்புலமாக வருகிறது. //திக்குமுக்காடும் உணர்வை சமாளித்தபடி அவள்
அனிச்சையாய்க் கண்ணாடி எடுத்து முகம் பார்க்கிறாள்
மகளின் முகத்திற்குப் பின் நெருக்கமாய் அம்மாவின் முகம்
கூர்ந்து கவனிக்கையில் புலப்படுகிறது
அம்மாவின் முகத்துக்குப் பின்
அம்மாவின் அம்மாவின் அம்மாக்களின் முகம்
சில சாயல்களில் அப்பாக்களின் முகமும் – அங்கே
கனிந்து எழும்புகிறது வாழ்வின் களிச் சிற்றலை.// இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.
வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி மிருணா. “களிச் சிற்றலை” யோட பாதிப்பு இதுல இருக்கு.. ஆனா உங்க அளவுக்கு நான் எழுத ரொம்பவே நாளாகும். I really admire your work and wish I could get the flow like yours !