உரமூட்டை,
குவித்து வைத்த
மஞ்சள், குங்குமம்,
டீக்கடை பால் ஆவி,
புகையிலை நெடி,
மஞ்சள் வாழைத்தார்கள்,
குவித்து வைத்த
சம்பங்கியும், சாமந்தியும்,
ஸ்டார் ஷூ மார்ட் தோல்
வாசனை,
ஸ்ரீதர் கஃபேயில்
போட்ட சாம்பிராணி
வெத்தலைக் கூடை,
தனியா அரைக்கும்
மாவு மெஷின்,
பெட்ரோமாக்ஸ் தள்ளுவண்டி
வேர்க்கடலை
இவை கலந்த
மணத்திற்கு
பஜார் வாசனை
என்று பெயா்.
Be First to Comment