யானைக்காலோடு யாரும்
சைக்கிளில் போவதில்லை
சைக்கிளில் போவதில்லை
கூன் முதுகு போட்டு
டீக்கடைக்கு போகும்
முதியவர்களில்லை
டயர்கள் பொருத்திய
மாட்டு வண்டி வைத்த
பணக்காரர்களில்லை
வணக்கம் சொல்லிகொண்டே
வண்டியோட்டும் வாத்தியார்களில்லை
கவரில்லாத, பெயர் தெரியாத
மாத்திரைகள் பொட்டலம் கட்டும்
டாக்டரில்லை
நூல் சுற்றிய மைசூர்பாகு மாளிகை
பல கண்ணாடியில் மின்னும்
கடையில்லை
உட்கார்ந்து பேச
வாராவதியுமில்லை
நகரத்தில்.
:).. Gud one!!
nandru