Skip to content

மீன் கனவு

ஒரு நீலவானம்
பெரு நீலக்கடல்
நீர் வழி சூரிய வெளிச்சம் – அதில்
ஆயிரம் உயிர்கள்
கிடக்க கடலடி மணல்
ஒளிய பாறைகள்
வேடிக்கை பார்க்க
உடைந்த கப்பல்
மேற்பரப்பில் எப்போதோ கேட்கும்
கப்பலின் சங்கு
நான் கொல்ல சில உயிரும்
நைலான் வலையில்லா வழியும்
உலவிடும் வாழ்வு –
கனவில்..
சோப்புத் துண்டுகள் படிக்கட்டில்,
துணி துவைக்கும் தெப்பக்குளத்தில்
வீசி மிதந்திடும் பொரிக்கு
நூறு மீனோடு வாய் பிளந்து
சண்டையிட்டு
ஏமாறும் வாழ்வு –
நிஜத்தில்
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: