நெடுங்கதவு மூடிய பின்
கீற்று வழி நிலவொளியில்
வெளிவந்தனர்
ஒவ்வொருவராக..
மாலை, கவசம், நகை
கழற்றி,
நூறுகால் மண்டபம் தாண்டி,
மகிழம் பூ கொட்டிய மரத்தடி
கடந்து
கரையில் சங்கும் சக்கரமும்
கிடத்தி வைத்து,
பெருந்தேவி ஏதோ கதை
சொல்ல,
எங்கோ வந்த பண்பலை
பாட்டு கேட்டபடி
குளத்து படியில் மீன் கடிக்க
குளிர் நீரில்
கால் நனைத்திருந்தார்
நாளெல்லாம் ஓங்கி உலகளந்து
காலெல்லாம் கடுத்த கடவுள்.
Be First to Comment