Skip to content

காத்திருத்த‌ல்

ஏதேனும் ஒரு வாக‌ன‌த்திற்காக‌,
asdfg ;lkjh அடிக்க‌ வ‌ருப‌வ‌ளுக்காக‌,
த‌டுப்பூசி போடுவ‌த‌ற்காக‌,
முடி வெட்டிக்கொள்ள‌
என் முறை வ‌ர‌,
சிக்னலில் ப‌ச்சை விழ‌,
ந‌டு இர‌வில் போன‌
மின்சார‌ம் திரும்பி வ‌ர‌,
அர‌சு அலுவ‌ல‌ரின்
கையெழுத்து வாங்க‌,
பெரிய‌ டாக்ட‌ர் ர‌வுண்ட்ஸ் வ‌ர‌,
முடிய‌ப்போகும் உரையாட‌லுக்காக‌,

இப்ப‌டியெல்லாம் காத்திருந்து
த‌ற்போது

வேறு மாதிரியாக‌க்
காத்திருக்கிறேன்

நிக‌ழ்வுக‌ளை சும‌ந்துகொண்டு
பொருத்த‌மான‌
உவமைக்கும்
வார்த்தைக‌ளுக்கும்.

Published inக‌விதை

2 Comments

Leave a Reply to Nags Cancel reply

%d bloggers like this: