இரவின் கருப்பில்
வாகனத்து
முன் விளக்கின்
நேர்க்கோட்டு வெளிச்சத்தில்
செவ்வகமாய்த் தெரிந்த
மஞ்சள் அடர் மழை போல்
கதவிடுக்கு வழியே
உன்னைப் பார்த்த
கணம்
உடல் மெழுகு உருகி
உயிர்ச்சுடர் கண்சிமிட்டி
அசைந்தபடி
எரிந்தது போல்
ஒரு குடைக்குள் நெருங்கி,
எதிர்பாராமல்
உன்னை முத்தமிட்ட
கணம்
மல்லிப் பூக்குவியலில்
விழுந்து மறைந்த
எடைக்கல்லாய்
நம்முள்
நாம் தொலைந்த
கணம்
Be First to Comment