ஓடும் ஆற்றைத் தடுத்து
கல் அடுக்கி
கரிகாலன் கட்டியது
கல்லணை
நீரை விரட்டிவிட்டு
மண் கொட்டி
நாம் கட்டுவது
நீரின் கல்லறை
நதிக்கரையில்
செய்வதை
நதிக்கே செய்தோம்
குட்டை வீடாக
குளம் ரோடாக
கண்மாயில் ரயில் போக
ஏரியில் எழுப்புவோம்
ஸ்மார்ட் சிட்டி
இது போக ,
அடித்துக்கொள்வோம்
வேதத்தில் ஓடியது
சரஸ்வதியா
காந்திமதியா
என !
Be First to Comment