‘ 10 வருஷம் நாயா உழைச்சிருக்கேன் சார் ‘
‘ நீயும் ஹிந்துவா பொறந்து தொலச்சிருக்கலாம் ‘
‘ ஆனி பையன் வீட்ல ஆடி மாசம் பொண்ணு வீட்ல ‘
‘ மாவரைக்கும்போதே கொஞ்சம் அவல் சேக்கணும்கா ‘
‘ ஆர்டரெல்லாம் முன்ன மாதிரி வர்றதில்ல சார் ‘
‘ அவன் தாண்டி பஸ்ட் லெட்டர் குடுத்தான் ‘
‘ நெல்லிக்கா சாறு சாப்டா ப்ர்ஷருக்கு கேக்குதாம் ‘
‘ அப்பல்லாம் செல்போனா பாழா ‘
நடக்க வந்தவர்கள்,
ஓட வந்தவர்கள், வேலை தேடுபவர்.
வேலையை விட்டவர்,
கடிகாரம் கடந்து காதல்
பேசுபவர்கள்,
பென்ஷன் வாங்குபவர்
என பல தரப்பட்டவர்களின்
கவலை கார்பன்-டை-ஆக்சைடை
உள்ளிழுத்து
ஆறுதல் ஆக்சிஜனை
அனுப்பின
மாநகராட்சி பூங்கா மரங்கள்.
Be First to Comment