மெழுகு தீர்மானிக்கும்
நூலெரியும் நேரம்
வெயில் தீர்மானிக்கும்
பூ வாடும் நேரம்
காற்று தீர்மானிக்கும்
தீபத்தின் வெளிச்சம்
மருந்து தீர்மானிக்கும்
நோயின் தீவிரம்
உதடு தீர்மானிக்கும்
முத்தத்தின் அழுத்தம்
உன் வெட்கம்
தீர்மானிக்கட்டும்
நம் இரவின்
ஆயுள் !
Be First to Comment