அடிபட்டது போல் ஆரஞ்சு சிவப்பாக,
எக்ஸ்ரே தீற்றல்களாக,
வெறும் அமைதியும் ஆழமும்
சேர்ந்த நீலமாக,
கொந்தளிக்கும் அடர் பஞ்சு
வெண்மேகமண்டலமாக,
அபூர்வமாக நீல இரவு ஒளிர்
மேகங்களோடு,
மிரட்டும் சாம்பல் நிற
இருண்ட மேகங்களுடன்
இப்படி ஒவ்வொரு நாளும்
செய்தி வாசிக்கும் பெண்ணின்
உடையைப் போல்
தயாராகிறது வானம்,
அருவியில் உருவான
வானவில்லின் நிறங்களோடு
ஒத்துப் போக.
Be First to Comment