சிக்னல் சிவப்பில்..
தூங்கும் குழந்தையுடன்
பிச்சை எடுத்தபடி
ஒரு பெண்
தூக்கம் கலைந்த
குழந்தை சிரித்தது
அந்தப் பெண்ணின்
தோள்பட்டையில் வெறும்
ஈறால் கடித்தது
முடி கையில் சிக்கி
இழுத்துச் ஆடியது
அந்தப் பெண்ணும்
குழந்தையின் மூக்கில்
உதட்டில் முத்தமிட்டு
விளையாடியபடி ஒரமாகப்
போய்விட்டாள்
காரிலிருந்து ஐந்து ரூபாய்
நாணயத்தை நீட்டியபடி
ஒரு பிச்சைகாரன்
Be First to Comment