நீ கோலம் போட்டு
புறங்கையால் நெற்றி
முடி தள்ளும் பொழுதில்
ஒரு கை கட்டி
செயின் டாலரை
பல்லில் கடிக்கும் பொழுதில்
புதுக் கம்மல் மாற்றியதை
பேசாமலேயே
புரிய வைக்கும் பொழுதில்
நீ திரும்பி, பின் கழுத்து
முடிச்சுருள் நான்
பார்க்கும் பொழுதில்
நிச்சயமாக
இருக்க முடியாது
என் இயல்பில்,
என்னால்.
Be First to Comment