படிக்கட்டுகள் பலவிதம்..
மாடி போட்டோ ஸ்டுடியோவுக்கு
சுழன்று செல்லும் படிக்கட்டுகள்
ஏவிஎம் பட தொழிலதிபர் வீட்டில்
இருபுறம் சேரும் படிக்கட்டுகள்
மலைக்கோயில் உச்சிக்கு
பாறையிலான படிக்கட்டுகள்
நகரத்து மாலில் நுரை தள்ள
நகரும் படிக்கட்டுகள்
வைக்கோல் போரில் சாய்ந்திருக்கும்
மூங்கில் ஏணிப் படிக்கட்டுகள்
ஏறும் படிகளை விட
ஈர்த்ததென்னவோ
பாதாளம் போகுமென்ற
பொய்க்கதை நம்பிய
ரெட்டியார் கிணற்றில்
பக்கவாட்டில் பதிந்து,
தண்ணீரில் இறங்கி மறையும்
பாசி படர்ந்த பாறை
படிக்கட்டுகள் தாம்.
Be First to Comment