எடையில்லாதது உன் சொற்கள்
கனத்திருக்கும் உன் மௌனம்
பொறியாய் உன் சிரிப்பு
பந்தமாய் உன் சீற்றம்
மயிலிறகாய் உன் மகிழ்வு
விழும் பெருமரமாய் உன் நிராகரிப்பு
பரவும் தீயாய் உன் அவதி
கவிழ்ந்துறங்கும் குழந்தையாய்
உன் அமைதி
அருவியில் திணறும் மூச்சாய்
உன் முத்தம்
பொசுக்கும் அமிலமாய் உன்
கண்ணீர்
லேசானது உன் பார்வை
அடர்ந்திருக்கும் உன் கோபம்
தாமரையிலை நீர்த்திரள்
உன் இயல்பு
நீரில் விழும் பஞ்சுப்பொதியென
உன் பிரிவு
Be First to Comment