தூரம்

வெள்ளை வெளிச்சமும்
மிதமாக வழிந்த
சாக்ஸபோன் இசையுமாக
சற்றே ஆடம்பர உணவகம் அது

ஆப்பம் சுடும்
நேபாள மாஸ்டர் ஆலாப்,
கண்ணாடி சமையலறை வழியாக
வாடிக்கையாளர்களின்
குழந்தைகளைக் காட்டி..
பிறந்தபோது மட்டுமே
பார்க்க முடிந்த தன் மகளும்
“இப்படி தான் வளர்ந்திருப்பாள்”
என்று சொல்லி வைப்பான்
சக ஊழியர்களிடம்.

அவன் மகள் போலவே தோன்றிய
அப்படியொரு சிறுமிக்கும்
அவனுக்கும்
இடையில் ஓடிய
கண்ணாடியின் தூரம்
2500 கிலோமீட்டருக்கும்
மேலிருக்கும்

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!