மிதமானதொரு கோயில்.
அதன் வாசலில்
மிதமான உயரத்தில்
ஒரு யானை
பொட்டிட்டு,
உருண்டை உணவு வாங்கி,
கொலுசு மாட்டி,
பெண் பெயரிட்டு,
சற்றே நளினமாக
ஆடியபடி இருந்தது
நீர் தேடிப் போவது
வறண்ட வனத்தில் அலைவது
பெருங்கிளை ஒடிப்பது
மறந்து
கண்ணில் கானகம்
தொலைத்து
How do you write so much? I’ve totally written 100 poems or so. But 30 posts in a month is too productive!
Thanks for the compliment
You know well.. it’s all the good mood which pushes to write more and a nice supporting group of friends !