ஞாயிற்றுக்கிழமை இரவு
பெய்த மழையின் சாட்சியாக
தெருவோரம் தேங்கிய நீர்
பாதி நனைந்த காம்பவுண்ட் சுவர்
சற்றே கிளை தாழ்ந்த மரம்
சாலையில் ஒடிந்த கிளைகள்
சிதறிய தழைகள்
மீதி மழையை தேக்கிய இலைகள்
ஓரம் நனைந்த தினசரி
கால்வாயில் கவிழ்ந்த கப்பல்கள்
சைக்கிளின் பின்னே ஈரப்
பால் பாக்கெட்டுகள்
ஆட்டோவில் தும்மலோடு
பள்ளிக் குழந்தைகள்
திங்கள்கிழமையின்
வெய்யில் விடியல்
கொஞ்சம் கொஞ்சமாக
அழிக்கத் தொடங்கியிருந்தது
ஞாயிற்றுக்கிழமையின் மழை
அடையாளங்களை
Had some great and vivid imagery. KUDOS! What I could derive is, I think, “Life moves on”.
May I know whether my interpretation is correct?
Hi.. Thanks for visiting and your comments. I meant Monday normally erases the fun we had on Sunday.. However, the reader has all the privilege to interpret on his own. Keep visiting.
That’s a cool theme. But everyone has their own thinking right.
But your theme is better than my interpretation.