மழையில் மண்சரிவு போல்
இன்பாக்ஸில் மெயில்சரிவு
தேங்கிய வேலைக்கு
முதலாளியின் சத்தம்
ஓங்கிய குரலில்
மனைவியின் ஓசை
ஸ்தம்பித்த டிராஃபிக்கில்
வாகனங்களின் ஒலி
ஓயாமல் அடித்தபடி
ஃபோனின் ரீங்காரம்
எனக்குள் எதுவும்
நுழையாமல்,
ரகசிய சிரிப்புடன்
அலையும் என்..
காதெல்லாம் அடைத்தபடி
அருவியின் பேரிரைச்சல் !
Be First to Comment