புங்க மர குச்சியால்
புளியங் கொம்பால்
பூண் போட்ட பிரம்பால்
கட்டை ஸ்கேலால்
டஸ்டரால்
சாக்பீஸால்
பைண்டிங் செய்த புத்தகத்தால்
சரமாரியாக பள்ளிக்கூடத்தில்
அடி வாங்கியபோது
கலங்கியதில்லை
கலங்கினேன்
கான்வென்டில் டீச்சர்
கையில் அடித்த
கண்ணாடி ஸ்கேல்
இரண்டாக உடைந்ததை
சிரித்துக்கொண்டே
மகன் சொன்ன போது
இன்னும் மாறாமல் சமச்சீராக
வாத்தியார்களிடம்
அடி வாங்குவதை நினைத்து.
visu, soooppper. one of ur best…