உழாமல் காய்ந்திருந்த
விளை நிலத்தின் வரப்பில் தானியம்
தேடிக் கொத்தியபடி
விளையாடிக் கொண்டிருந்தது
ஒரு மயில்..
பக்கத்து மலையடிவாரத்தில்
இருந்து வந்திருக்கலாம்
அந்த காய்ந்த வயலின்
ரெஜிஸ்டிரேஷன் போன வாரம்
நடந்திருக்கலாம்
அங்கு ஒரு தனி வீடும்,
குடும்பமும் வரலாம்
அதில் ஒரு குழந்தை
படிக்கலாம்
“மயிலின் வாழ்விடம்
காடு – அவைகளைக்
காப்பது நம் கடமை ” என.
Be First to Comment