முதலில் எதிர்பட்டாய்
புள்ளியாக நீ
உன்னைக் சுற்றி முடிக்கும்போது
தெரிய வந்தது
உன்னைப் போலவே
மேலும் ஒரு புள்ளி – ஒரே மாதிரியான
புதுப் புள்ளிகள் பூப்பதும்
அவற்றை நான் தொடாமல்
கடப்பதுமான நாடகம்
தொடங்கிய முதற் புள்ளியின்
சுற்றருகே முடிந்தது
சிரித்தபடி மீதியிருந்தது
முதற்புள்ளியான
உன்னோடு ஒரு புது சிநேகமும்,
மிச்சப் புள்ளிகளைச் சுற்றி
என் பாதைகள் நெய்திருந்த
ஒரு கோலமும்.
Be First to Comment