கட்டிக் கற்பூரம் எரிந்து
சடசடக்கும்
சரவிளக்கு எரிந்து
பெரிய மூக்குத்தியருகே
முகம் சுற்றும் நெய்விளக்கு எரிந்து
அனலோடு அனலாக
கன்னக் கதுப்பெல்லாம்
சுட்டபடி அமர்ந்திருந்த
அங்காளம்மனுக்கு
ஆறுதல் அளித்தது
கர்ப்பகிரகத்தைச் சுற்றி
ஏசிக் காற்று வர
தகர ஷீட்டுகள் வளைத்து
அடிக்கும் சத்தம்.
Be First to Comment