செவ்வகப் பெட்டியில்
கந்தகத் தலைகளோடு
படுத்திருப்பதும்,
இரண்டு அங்குலம்
எரியும் நேரம் மட்டுமே
வாழ்வெனவும் இருந்தது,
3 வயது அபர்ணாவிடம்
சிக்கும் வரை.
அவளால்,
முதல் முறை
தொட்டித் தண்ணீரில்
கவிழ்ந்து, மிதந்தபடி..
அவளின் தலை சாய்த்த
சிரிப்பைப் பார்க்கும்போது,
இந்த முறை நீரால்
வீணாகிப் போனதில்
பெரிய வருத்தமேதுமில்லை
தீக்குச்சிகளுக்கு !
Be First to Comment