பெரிய கோபுரம் வைத்த
கோயிலில்
நீண்ட மதில் கொண்ட
பள்ளிக்கூடத்தில்
காவலோடு இருக்கும்
சிறைச்சாலையில்
மார்க்கெட் மத்தியில் மருவி
நிற்கும் கோட்டையில்..
பெரிய,
தகப்பன் கதவு
மூடிய வேளைகளில்
வாய்க்கப் பெற்றவர்க்கு மட்டும்
திறந்து விடப்படும்..
ஒரு ஆள் மட்டும்
நுழையக்கூடிய
சிறிய,
மகன் கதவு.
Be First to Comment