முன்பு
காதலித்தவர்களும்,
காதலித்தவர்களும்,
முறை கொண்டாடி
மணமுடிக்க
முடியாமல் போனவர்களும்,
சற்று அதிகமாகவே கொஞ்சப்படும்
அவர்களின் குழந்தைகளும்
இது தெரியாமல்
சிரித்து வைக்கும்
தற்போதைய துணைகளும்,
கூட்டத்தில் தன் மகளுக்கு
ஏதாவது ஜாதகம் கிடைக்க
ஏங்கும் அப்பாக்களும்
இதன் எந்த விபரீதமும்
புரியாமல் சிரித்த படியிருக்கும்
மணமக்களும்
இணையும் ஒரு
விசேஷம்.
yenakke yenakku..
LOL