உன்
கால் பச்சை நரம்பு – அது
சித்திர வீணையின் தந்தி
நீளும் கை விரல் – அவைக்
காற்றாளும் வேணு மூங்கில்
கிறங்கி மூடும் கண்கள் – அவை
ஒற்றை வயலினின் நீள இழுப்பு
தூங்கும் குழந்தையின் மூச்சு
சீரான ஸ்வரமாக
உள்ளே உதிரம் போல்
தசையெங்கும் இசை பாய
ஒவ்வொரு தொடுதலிலும்
கூரையில் சுற்றும் ஃபேனில்
உருவாகும் எழுபது
நிறங்கொண்ட ஒரு
வானவில்.
Be First to Comment