பூவரச மரத்தின் அடியில்
அடைந்த வாத்துக்கள்
ஒட்டு திண்ணையில் இடித்தபடி
ஒன்றும் ஆடுகள்
அடுப்பங்கரை சூட்டில்
ஒடுங்கும் பூனைகள்
பிரசவ வார்டின் எதிர்புற
ஸ்லாபில் சிலுப்பும் புறாக்கள்
இவை காண முடியாவிட்டாலும்
அடை மழையில்
பார்த்துவிட நேரிடும்
பாலத்து அடியில்
கூட்டமாக குளிர்வெட்கச்
சிரிப்புடன் சேர்ந்து
கர்ச்சீப்பில் தலை துவட்டிக்
காத்திருக்கும் இரு சக்கர
வாகன ஓட்டிகளை
Be First to Comment