முழுதும் நனைந்துவிடும்
கோபுரங்கள்
உப்பி சட்டத்துக்குள் அடைய
அடம் செய்யும் கதவுகள்
முன்னும் பின்னும் அடித்து
ஆரவாரம் செய்யும் ஜன்னல்கள்
கிளை தாழ்ந்து முழுமையாக
ஏற்கும் மரங்கள்
காய நேரமானாலும் நனைந்து எடை
கூடிடும் கோணிகள்
முன்னங்காலுக்கு மேல் லேசான
உதறல் தவிர பெரிய எதிர்ப்பேதும்
காட்டாத வண்டி மாடுகள்
ஆறாம் அறிவின் பயனால்
ஒடி ஒளிவோம்
நீயும் நானும்
நனையாமல், வாழாமல்.
Be First to Comment