Skip to content

நெடுஞ்சாலையில்..

நெடுஞ்சாலையில்..
செவ்வரளிச் செடிகள் சுற்றி பரப்பி
பஞ்சரான கல்லூரிப் பேருந்துடன்
செல்ஃபி எடுக்கும் மாணவர்கள்,
மஞ்சள் கனகாம்பரத்துடன் பதட்டமாக
சாலை கடக்கும் மாணவிகள்,
லுங்கி படபடக்க சாமந்திப்பூ
லோடு வேனில் தூங்குபவர்,
உயரழுத்த தந்திகளால் கைகோர்த்து
ட்ரான்ஸ்ஃபார்மர் சிறுவர்கள்,
காய்ந்த ஏரி கோல் போஸ்ட்டுகள்
இப்படியான என் பயணக்காட்சிகள்
கரைந்து சொட்டும்..
முன்னே செல்லும் வேனிலிருந்து
கோணி சுற்றிய ஐஸ் பாளங்கள்
மெதுவாகக் கரைந்து
தார்ச்சாலை மேல் உருவாக்கும்
நீர்ச்சாலை போல.
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: