பெயிண்டிங் செக்ஷனில்
தரை தெரியாமல் சருகுகள்
பேக்கிங் செக்ஷனில்
சிலந்தி வலைப்பின்னல்கள்
மெஷின் ஃப்ளோரெங்கும்
வவ்வால் எச்சங்கள்,
ஆல விழுதுகள் இறங்கிய
சைக்கிள் ஸ்டாண்ட்
கேண்டீன் சுவர் விரிசலில்
வளர்ந்த மரங்கள்.
அந்த இடத்தில்
சீருடைப் பணியாளர்களின் கலைந்த
க்ரீஸ் கறைக் கனவுகள்,
தள்ளிப் போன
பி எஃப் பேச்சுவார்த்தைகள்,
இவையாவும் இறுகிப் படர்ந்திருந்தன
துரு அடர்ந்த பெரிய மெயின் கேட்டின்
மேல் பெயர் தெரியாத கொடிகளாக,
மூடப்பட்டதொரு ஒரு பழைய
தொழிற்சாலையில்.
Be First to Comment