Skip to content

நேற்று இன்று நாளை – 1

சூரியனை வரவேற்க வந்தோமா
அல்லது
வழியனுப்ப வந்தோமா எனப்
புரியாமல்
அடிவானம் சிவந்துக்
குழம்பிக்கொண்டிருக்கும்போது
இன்றுடன் ஓட்டிக்கொண்டே
வந்து சேர்ந்தது நாளை
======
இரண்டாம் ஆட்டம்
முடித்து சைக்கிள்
எடுக்கும்போது
புதுப் பட போஸ்டர்
ஒட்டிக்கொண்டிருந்தனர்
நேற்றின் மேலே ஒட்டியபடி
பிறந்தது இன்றைய நாள் !
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: