இரவில் ஷிப்ட் முடித்து
விடியலில் டீ குடிக்கும்போது
பின் ஒட்டியிருந்த
கடற்கரை மண்ணைத்
தட்டி விட்டு புறப்படுவதைப் போல்
மீதி இருந்த நேற்றைத் தட்டியபடி
நகர்ந்து வந்து சேர்ந்தது மற்றுமொரு
இன்று
=========
நேற்றுடன் நடந்த நெருக்கத்தை
நினைத்து இன்று வந்து
விடிந்தப் பின்னரும்
வெட்கமில்லாமல் பகலில்
ஒரு நிலா
Be First to Comment