பல வருடங்களாக விட முடியாமல்
மாதசம்பளத்தின் புலிவால்
பத்து வருடம் லோன் கட்டியும்
அசையாமல் இருக்கும் அசல்மாடு
எந்த மருத்துவத்திலும் கேட்காத
அப்பாவின் உடல்நிலை
பெயின்ட் உதிரும் சுவராக
பிடிப்பு உதிரும் இல்லறம்
குடும்பத்துடன் கட்டிலில்
குறுக்கு வாட்டில் படுத்திருக்கும்
குடும்பத்தலைவன்
பின்னரவில் புரண்டு படுக்க
ஜன்னல் வழிப் பூனையாக
இன்றுடன் ஒட்டிக் கொண்டிருந்த
நாளை வந்து சேர்ந்தது
எந்த மாற்றமுமில்லாத
நேற்றைப் போலவே
Be First to Comment