அ.ஆ.மே.பள்ளி
Published inகவிதை
நல்முத்துப் பஞ்சணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க தனியா இருந்தே.. ] நல்முத்துப் பஞ்சணைமேல் நாதனுடன் நீயிருக்கும் வேளையிலே நின் சொல்முத்துச் சொற்களால் எந்தன் குறை தீர்க்கச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வளிக்கும்.. அம்பிகையே ! - தருமி , திருவிளையாடல்
பச்சை கலர்ல சைக்கிள் கொடுத்தாங்க
பெருசு பெருசா சாதம் போட்டாங்க
அளவு சிறுசா முட்டையும்,
இன்னும் புஸ்தகம்
கொடுத்த பாடில்லை..
அப்படியே கொடுத்தாலும்
படி படின்னு சொல்வாங்க..
எப்படி படிக்கணுங்கறதை
மட்டும்
சொல்லித் தரவே மாட்டாங்க,
கடேசி வரைக்கும்.
One Comment