Skip to content

இரு மரங்கள்

ரயில்பாதைக்கு அருகே
பெரிய மரங்களின் கீழ்
சிறு கோயில் கொண்ட
ஒரு கடைசி சாலை
தூரத்து ஏரியின் பரப்பும்,
லோக்கல் ரயில் மேற்கூரையின்
மின் இணைப்புக் கம்பிகள்,
திறந்த வெளி கரிக் குவியலோ
மூடிய சரக்குப் பெட்டிகளின்
மேற்பரப்பு,
பாசஞ்சர் ரயில்பெட்டியின் மேல்
பட்டன்களும் பார்த்து
காற்றில் சலசலத்து
கையசைத்தபடி இருக்கும்
ஒட்டி வளர்ந்து
தலை சாய்த்த
அரச புருஷ மரமும்
வேப்ப மனைவி மரமும்
ரயில் குழந்தைகளின்
கையசைப்பு
தெரியாவிட்டாலும்.

 

Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: