[ நண்பர் கிருஷ்ணா அனுப்பும் ஃபோட்டோ பார்த்தேன்.. கவிதையை வார்த்தேன் [ படிச்சிட்டு வேர்த்தேன்னு கமெண்ட் அடிக்காதீங்க.. ]
ஓர் இனம்தான்
நீயும் நானும்
பச்சையால் நீ
பராசக்தியின் தோள்
மேலேயும்
காரால் நான்
வெட்ட வெளியில்
நட்ட கோபுரத்தின் மேலும்..
===
பெயிண்டர் பெருமாள்
பல வண்ணம்
பல பிரஷ்கள்
பல நாட்கள்
செய்த வேலையால்
வண்ணமயமாக நீயும்
காண்ட்ராக்டர் காசு
தராததால்
மங்கிய நிலையில்
நானும்
வானத்தை நோக்கியபடி
===
வலிமையான தோள்களால்
பரந்த முதுகால்
யாளியின் பராக்கிரமத்தால்
ரிஷபத்தின் திமிலால்
கோபுரம் நிற்பதாக
பெருமைப்பட்டன
பொம்மைகள்
இடிதாங்கி
சிரித்துக்கொண்டது.
நல்ல கவிதை.