Skip to content

வீ ஆர் எஸ்

சமனில்லா கூர்முனைகளுடன்
கரடு முரடாகவே
தொடங்கியது என்
நீர் யாத்திரை
வெவ்வேறு ட்ரான்ஸ்ஃபரில்
வெயில் தாங்கி,
சிறு மழை தேக்கி,
அடர் காட்டில்,
அருவிக்கடியில்,
படித்துறை பக்கத்தில்
கூர்முனைகள் தேய உருண்டு
பல வருட முடிவில்
சந்தன மாலையும்,
பிரேம் போட்ட மடலும்
வாங்கி முனைகளற்ற
கூழாங்கல்லாய் தற்போது
பணியின் முடிவில்
நிற்கிறேன்
பழகிய நீரின் குளிர்ச்சியை
உடலெங்கும் தேக்கி..
மீதி நாட்களுக்காக
Published inUncategorized

Be First to Comment

Do you like what you read? or hate it? Please let me know what do you think.. I would love it!

%d bloggers like this: