மண் வீடாக முடியாது
சிமெண்டுடனும் சேர
வழியில்லை
சின்னதாய் சுழல் உருவாக்கி
தெருவில் காகிதங்களோடு
பறக்க வழியில்லை
சதா சரிந்தபடியே
பொழுது போக்கும்
சிறையினுள்
மண் துகள்கள்,
கண்ணாடிக் குடுவையை
அபர்ணா ஓர் நாள்
உடைக்கப் போகும்
தருணம் எதிர்பார்த்து
Be First to Comment