உன் கருந்தோகை
இமைகளில்
என் இமைகள் சேர
உன் கருவிழிக் கிணற்றில்
என் முகம் வளர
மத்தியில் சிறு நகை
ஒற்றைக்கல் மூக்குத்தி
என் கன்னத்தில் வரைய
ஸ்டிக்கர் பொட்டு நீந்தி நகர
காதின் பின்னே கனலெரிய
மேயும் மூச்சில் கழுத்தில்
பூக்கும் தீப்பூக்கள்,
உதிர்ந்து ஒட்டிக்கொள்ளும்
போர்வையெங்கும்
ஒவ்வொன்றாக !
Be First to Comment