எப்படி படிப்பது,
எப்படி வேலைக்கு சேர்வது,
அதில் வளர்வது,
எப்படி பெண்ணை தேர்ந்தெடுத்து
மணம் செய்வது,
எப்படி விட்டுக்கொடுத்து
வாழ்வது,
எப்படி சம்பாதிப்பது,
எப்படி சேமிப்பது,
எப்படி ஆரோக்கியமாக இருப்பது,
என்பது பற்றியெல்லாம்
ஓரளவுக்கு அறிவு வரும்போது
பெற்ற அப்பா
நோயுறுவதும்
பெற்ற மகள்
சடங்காவதும்
நரையோடு
நடந்து விடுகிறது.
One Comment