ஒன்றாகப் படித்த நண்பர்கள்
பல காலம் கழித்து
சேர்ந்து குடித்தனர்..
பல காலம் கழித்து
சேர்ந்து குடித்தனர்..
ஹாஸ்டல் நாட்களில்
சகட்டு மேனிக்கு
அடித்துப் பின்னிய
வார்டன் ஜார்ஜ் பற்றி
திட்டியபடியே
குடித்தனர்..
சற்று யோசித்து சொன்னான்
ஊரிலிருந்து வந்த ஒருவன்..
இல்லடா.. ஜார்ஜ் உடம்புக்கு
முடியாம கிடந்து
யாரும் கூட இல்லாமலேயே
செத்தாராம் என்று..
ஒரு கணம் யோசித்து
என்ன இருந்தாலும் ஜார்ஜ்
நல்லவன்டா..
இது ஜார்ஜுக்காகடா
என்று அடுத்த
கிளாஸ் ஊற்றப்பட்டது.
அருமை….எம் ஜி ஆர் செத்துப் போயட்டாருன்னுதான்பா குடிக்க ஆரம்பிச்சேன் என்னும் ஜனகராஜ் ஜோக்கை நினைவு படுத்துகிறது.
ரசித்தேன்!
Good one.